நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, பாஷா இறுதி அஞ்சலியில் பங்கேற்க சென்றபோது ஓட்டு பேச்சைக்காக நான் செல்வதாக விமர்சித்துள்ளனர். இஸ்லாமியர்கள் இதுவரை எனக்கு வாக்களித்தது கிடையாது. அவர்கள் ஐந்து கடமைகளில் ஆறாவது கடமையாக திமுகவுக்கு வாக்களிப்பதை வைத்துள்ளார்கள்.

தம்பி அண்ணாமலை கிட்ட நான் அன்பா கேட்கிறேன். உங்கள் மனதை தொட்டு சொல்லுங்க… இஸ்லாமிய மக்களை எதிர்ப்பதை தவிர உங்களுக்கு கொள்கை, கோட்பாடு இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம் என கேள்வி எழுப்பினார்.