
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசான் மாவட்டத்தில் ஹடிகே என்ற கிராமம் உள்ளது. இங்கு ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 12 கோழிகள் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதில் ஒரு கோழியின் வயிற்றை அமுக்கும்போது தன் வாயிலிருந்து தீ வந்தது.
அதாவது 12 கோழிகள் இறந்த நிலையில் ஒரு கோழியின் வயிற்றை அமுக்கும்போது வாயிலிருந்து தீ வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த கோழிகளுக்கு கெமிக்கல் கலந்த விஷயத்தை கொடுத்து கொன்று இருக்கலாம் எனவும் அதனால் தான் வாயிலிருந்து தீப்பிழம்பு வெளியேறியது எனவும் கூறப்படுகிறது.