
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் அல் அமீன். இவர் தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர். இவர் சமீபத்தில்தான் இந்த கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அல் அமீன் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இன்று காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மேலும் இதைத் தொடர்ந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இருந்து அவரை நீக்கியுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அவர் பாலியல் வழக்கில் கைதானதால் அவரை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.