தொழிலதிபர் ஒருவர் யூட்யூபில் ரீல்ஸ் பார்த்து அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனால் முதலீடு ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் போல அவரை ஏமாற்றி ரூபாய் 1.2 கோடி மோசடி நடத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறையில் தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சென்னையில் ஓட்டுனராக பணிபுரியும் முகமது இஸ்மாயில், திருப்பூரில் மறுசுழற்சி ஆடைகள் ஏற்றுமதி செய்யும் பணியில் உள்ள அபுதாஹீர், கேசவராஜ், கலில் அகமது ஆகிய நான்கு பேர் மோசடி வேலையை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

கலில் அகமது மோசடிக்கு முக்கிய ஏஜெண்டாக இருந்துள்ளார். இந்தியாவிலிருந்து கம்போடியாவிற்கு சென்று அங்கே இருந்து மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரிய வந்தது. மோசடி வழக்கில் சிக்கிய கேசவராஜ் போலி நிறுவனம் மற்றும் வங்கி கணக்கு திறக்க உதவி வந்துள்ளார். இது தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் மோசடி வழக்கில் சிக்கிய நபர்களின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த நான்கு நபர்களையும் கைது செய்து காவல்துறையினர் பாதுகாப்பில் விசாரணை நடைபெறுகிறது.