
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் மாணவிகள் பள்ளிக்கு நடந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஒரு மாணவியின் அந்தரங்க உறுப்பை தொட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அந்த நபரிடமிருந்து விலகி விட்டார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முகத்தை மூடி இருந்ததால் அவர் யார் என்று தெரியவில்லை. இதனால் பிற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.