பள்ளி காலங்கள் முடிந்த பிறகு கூட மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. ஆனால் அந்த ஆசை நிறைவேறாது. இருப்பினும் ஜப்பானுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாணவர்களாக முடிகின்றது. அதாவது ‘ஒரு நாள் மாணவர்’ என்று அழைக்கப்படும் ஒரு புதிய திட்டம் உள்ளது. அதன் மூலம் மாணவர்களை ஒருநாள் ஜப்பானிய பள்ளியில் படிக்க வைக்கின்றனர். இந்தப் பள்ளியில் படிப்பதற்கு ரூ. 17000 தேவைப்படுகின்றது. அதாவது 17,000 என்றால் 30000 யென் செலுத்திய பிறகு, ஜப்பானிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த திட்டத்தின் கீழ் உள்ளூர் பள்ளிகளில் ஒரு நாள் படிக்கலாம். இந்த திட்டம் உண்டோகயா என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கிழக்கு ஜப்பானில் உள்ள ஒரு பழைய பள்ளியை இதற்காக தயாரித்துள்ளது. இது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது.

இது சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்காகவும், ஜப்பானில் உள்ள கலாச்சாரம் மற்றும் கல்வி முறைகளை வெளிநாட்டவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும் வழங்கப்படுகிறது. பங்கேற்பாளர்கள் பள்ளி சீருடைகள் அணிந்து, கிளப் நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர் மற்றும் ஜப்பானில் தனித்துவமான பள்ளி கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்துகின்றனர். பள்ளிக்கு வருபவர்கள் ஸ்கூல் யூனிபார்ம் அல்லது சூட் அணிய வேண்டும். இதையடுத்து அங்குள்ள ஆசிரியர்கள் அவர்களுக்கு எழுத்துக்கலை, பேரிடரில் இருந்து தப்பிக்கும் பயிற்சி மற்றும் பாரம்பரிய ஜப்பானிய நடனங்கள் போன்ற வகுப்புகளை நடத்துகின்றனர். மேலும் கட்டானை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றியும் கூறுகின்றனர்.

இதைத்தவிர ஜப்பானில் எப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது, அப்படி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எந்த வயதாக இருந்தாலும் ஒரு நாள் மாணவராக முடியும், ஆனால் ஒரு நாளில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்களின் மதிய உணவிற்கு பிறகு, அவர்களுக்கு விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கின்றனர். அதோடு இவர்கள் யாங்கி என்ற கலாச்சாரத்தை பற்றியும் அறிந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் அவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதன் பின் பங்கேற்பாளர்கள் பள்ளி அறையை சுத்தம் செய்ய வேண்டும். இது ஜப்பானிய கலாச்சாரத்தின் மிக முக்கியமான பகுதியாகும்.