
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் ரகு தாத்தா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கைவசம் பல படங்களை வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்தி சமீபத்தில் வெளியானது. அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 15 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இன்று கீர்த்தி சுரேஷுக்கு அவரது காதலனுடன் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். அந்த போட்டோவும் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.