
பெஞ்சல் புயலால் தமிழக மற்றும் புதுச்சேரி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத அளவு மழை பெய்து மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி காரைக்கால், ஏனாம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவரவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக 177 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.