
பீகார் மாநிலத்தில் அங்கஸ் குமார்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சி குமாரி(23) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 9 மாத அசிஸ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. குமாரும் அவரது மனைவியும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று குமாரி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை அசிஸ் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென குழந்தையை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அம்சி குமாரி தனது குழந்தையை அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தார். அப்போது தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வாளிக்குள் குழந்தை தலைக்குப்புற கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்து டாக்டர்கள் அசிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.