
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியில் முனியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மகள் உள்ளார். தேவி டிப்ளமோ செவிலியர் படிப்பை முடித்துவிட்டு வீட்டிலேயே தங்கிய நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் செவிலியர் பணியை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவி காணாமல் போய்விட்டார். இதனால் அவர் அந்த தாய் முனியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், தேவியும் அதே பகுதியைச் சேர்ந்த சாய்ராம் என்ற வாலிபரும் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் சாய்ராம் சித்தி உறவு முறையான தேவி என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் சென்னை பெசன்ட் நகர் இருக்கும் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
தேவியின் தாய் மாமனான மணி என்பவரும், தேவியும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்துள்ளனர். ஆனால் மூன்று மாதங்களாக தேவியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தது. போலீசார் இரு தரப்பையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது விஜய் என்ற வாலிபர் தேவி தன்னை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து 5 லட்ச ரூபாய் வரை ஏமாற்றி பணத்தை வாங்கியதாக தேவியின் போட்டோவை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்தார்.
அடுத்த கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. தேவி அடுத்தடுத்து சுமார் 12 வாலிபர்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார். இந்த நிலையில் காவல் நிலையத்திற்கு வந்த தேவி மற்றும் சாய்ராமிடம் போலீசார் அறிவுரை கூறி பிரிந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். தன்னை பற்றி அனைத்து விவரங்களும் போலீசாருக்கு தெரியவந்ததால் தேவி தப்பித்தால் போதும் என தாயுடன் செல்வதாக ஒப்புக்கொண்டார். வேறு வழி இல்லாமல் சாய்ராமும் தேவியை பிரிந்து பெற்றோருடன் சென்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.