நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் சசிகலா என்பவர் செயல் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தார். கடந்த எட்டாம் தேதி அதே பள்ளியில் வேலை பார்க்கும் உடற்கல்வி ஆசிரியை அசீமா என்பவர் சசிகலாவை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து சசிகலா மற்றும் பள்ளி நிர்வாக குழு சார்பில் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் உடற்கல்வி ஆசிரியர் அசீமாவை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.