அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அதிமுக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதற்காக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் எனவும் கூட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் கண்டிப்பாக அழைப்பிதழ்களை கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டம் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் போன்றவைகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக கள ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சருக்கு முன்னிலையில் நிர்வாகிகள் மோதி கொள்கிறார்கள். எனவே அது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டத்தில் பேசப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.