
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை இடத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. சென்னப்பட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய தொகுதிகளில் நம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. பாஜக படுதோல்வி அடைந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் தொலைக்காட்சியில் வெளியாகின. இந்த முடிவுகள் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் பாஜக உறுப்பினர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விஜயவாடா மாவட்டத்தில் ஹொல்கார் பகுதியில் வசித்து வந்தவர் வீரபத்ரப்பா. இவர் தீவிர பாஜக தொண்டராவார். இவர் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். இதில் பாஜக மூன்று தொகுதிகளிலுமே தோல்வியை தழுவியது இவரை மிகவும் பாதிப்படைய செய்தது. இதனால் கோபத்தில் வீரபத்திரப்பா தனது வீட்டில் உள்ள தொலைக்காட்சி பெட்டியை தூக்கி வெளியே சாலையில் போட்டு அடித்து நொறுக்கி, உடைத்துள்ளார். சிலர் இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.