தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. த

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்து ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இன்று  மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் தமிழ்நாட்டிற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்களுக்கு அதிதீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது 12 முதல் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.