திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆட்டூர் தோப்பு பகுதியில் சமராச பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் உதய பிரகாஷ்(23) திருத்துறைப்பூண்டியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உதய பிரகாஷும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகானந்தத்தின் மகள் ஹேமாவும்(21) காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ஹேமா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதனால் மன உளைச்சலில் காதலர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் அவர்கள் ஆட்டூர் தொப்பு தெருவில் இருக்கும் உதய பிரகாஷ் உறவினர் வீட்டில் குடியேறினார்கள்.
நேற்று அதிகாலை திடீரென ஹேமா வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கண் விழித்துப் பார்த்த உதய பிரகாஷ் தனது மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் தனது மனைவியின் சடலத்துக்கு அருகே அமர்ந்து அழுதுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த உதய பிரகாஷ் வீட்டிற்கு எதிராக இருக்கும் புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணம் செய்து கொண்ட மூன்று மாதத்தில் காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
