தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் புஷ்பா 2, தமிழில் குபேரா, ஹிந்தியில் சிக்கந்தர், ரெயின்போ உள்ளிட்ட பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் க்ரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

அந்தப் படத்தில் விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த நிலையில் அதன் பிறகு டியர் காம்ரேட் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் லிவிங் லைப்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் உறுதிப்பட தகவலை இருவரும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர கொண்டா இருவரும் ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிடும் புகைப்படத்தை ஒரு பயனர் எடுத்து வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.