
கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. உலக பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் படிவத்தை அரசு தேர்வு துறையில் இணையதளம் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த கல்வித் தொகைக்காண ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நவம்பர் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரும்பம் உள்ள மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி விண்ணப்பிக்குமாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.