
தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி சில கடைகள் இதனை பயன்படுத்துவதால் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதனை பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் பார்சல் செய்து கொடுப்பதற்கு பேப்பர்கள் மற்றும் சில்வர் கவர்கள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்ற நிலையில் தற்போது தமிழக உணவு பாதுகாப்பு துறை ஒரு முக்கிய அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதாவது இனி தமிழகம் முழுவதும் டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் பார்சல் செய்வதற்கு இனி பிளாஸ்டிக் அவர்கள் மற்றும் சில்வர் தாள்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இனி பிளாஸ்டிக் பேப்பர்கள், அவர்கள் மற்றும் சில்வர் பாயில் கவர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இதனை மீறி பார்சல் செய்து கொடுக்கும் உணவகங்களுக்கு முதல் முறை ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். மேலும் மறுமுறையும் இதே தவறு நடந்தால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.