தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்திருந்த நிலையில் நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதன் பிறகு பகத் பாஸில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் 400 கோடி வசூல் சாதனை புரிந்திருந்தது. தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் அடுத்த மாதம் 6-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்கும் நிலையில் குத்துப்பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா ஆடுகிறார். அதன்பிறகு படத்தின் BTS இசையை தமன் மேற்கொள்கிறார். இந்நிலையில் இன்று புஷ்பா 2 தி ரூல் படத்தின் டிரைலர் நேற்று  மாலை வெளியாகும் என்று பட குழு அறிவித்திருந்தனர். நேற்று தெலுங்கு மற்றும் ஹிந்தி ட்ரெய்லர்கள் மற்றும் முதலில் வெளியான நிலையில் தற்போது தமிழ் டிரைலர் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவின் மிகவும் வைரலாகி வருகிறது.