சென்னை மாவட்டத்தில் உள்ள ஆர்.கே நகரில் திமுக சார்பில் எளியோர் எழுச்சி நாள் என்ற பெயரில் 48 ஜோடிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி என 30 பொருட்கள் திருமண பரிசாக கொடுக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு மணமக்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் மொய் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் திருமண நிகழ்வின்போது மணமகளின் களத்தில் அவரது தாய் பதற்றத்தில் தாலி கட்ட முயன்றார். இதனை பார்த்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிரித்தபடி என்னம்மா நீங்க தாலி கட்டுறீங்க..? மாப்பிள்ளை இடம் தாலியை கொடுங்க என கூறியுள்ளார். அந்த பெண்ணின் செயலால் மணமேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.