
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தொடங்கினார். அவர் கட்சி தொடங்கிய நிலையில் கடந்த மாதம் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். சமீபத்தில் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை என்பது ஒரு செயலி வாயிலாக நடைபெற்று வருகிறது. முன்னதாக 75 ஆயிரம் உறுப்பினர்கள் வரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது ஒரு கோடி உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது கிட்டத்தட்ட 93 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ள நிலையில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கட்சியில் சேர ஆர்வம் காட்டி வருவதோடு செயலியில் பலரும் ஒரே நேரத்தில் பதிவு செய்வதால் சர்வர் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக சர்வர் சரி செய்யப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கப்படுகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் அவருடைய கட்சி உறுப்பினர் சேர்க்கை என்பது கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கி வருகிறது. மேலும் இது அதிமுக மற்றும் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது