சென்னையில் உள்ள தொழிலதிபர் லாட்டரி கிங் மார்ட்டின் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார். அவருடைய மருமகனும் விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இவர்கள் இருவரில் வீடு மற்றும் தொடர்புடைய அலுவலகங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது மார்ட்டின் அலுவலகத்தில் 8.8 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இதன் காரணமாக தற்போது மார்க்கின் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது
