மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பல் துலக்கும் போது எதிர்பாராத விதமாக ‌ பிரஷை முழுங்கிவிட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயிற்றில் காயம் ஏற்படாத அளவுக்கு பிரஷை அகற்றி வெற்றிகரமாக அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றினர்.

இந்நிலையில் உலக அளவில் இதுவரை 30-க்கும் குறைவான நபர்கள்தான் பல் துலக்கும் போது டூத் பிரஷை விழுங்கியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்துலக்கும்போது பெண் ஒருவர் டூத் பிரஷ்சை முழுசாக விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.