
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் டாம் குரூஸ். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது இவர் Mission impossible the final Reckoning என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மே மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளதோடு படத்தின் டீசர் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதன்முதலாக மிஷன் இம்பாசிபிள் படம் வெளியான நிலையில் ஈதன் ஹண்ட் என்ற கதாபாத்திரத்தில் டாம் குரூஸ் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து 7 பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 8-ம் பாகம் வெளியாக உள்ளது. மேலும் இந்த டீசர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.