தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசினார். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் பின்னர் தான் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசவில்லை என்று கூறி கஸ்தூரி விளக்கம் கொடுத்தார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரிக்கு சம்மன் கொடுப்பதற்காக போலீசார் சென்றபோது அவருடைய வீட்டில் இல்லை. இதனால் நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள். இதற்கிடையில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகை கஸ்தூரியை பிடிப்பதற்கு 2 தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நடிகை கஸ்தூரியை போலீசார் தற்போது வலை வீசி தேடி வருகிறார்கள்.