நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. விஜய் தனது கட்சியின் கொள்கைகள், அரசியல் முன்னோடிகள், கட்சிக்கொடி உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் விஜய் தீவிரமாக இறங்கிவிட்டார்.

சமீபத்தில் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு உண்டு என விஜய் அறிவித்தார். இதனால் அரசியல் களம் சூடு பிடித்தது. விஜயின் பேச்சுக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் பெண் ஸ்னோலின் தாயார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.