தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சத்யராஜ். ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்த அவர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து  அசத்தியுள்ளார். தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மனைவி 4 வருடங்களாக கோமாவில் இருப்பதாக தற்போது அவருடைய மகள் திவ்யா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது தன்னுடைய அம்மாவுக்கு PEG குழாய் மூலமாக சாப்பாடு கொடுப்பதாகவும் தங்களுடைய குடும்பம் முற்றிலும் உடைந்து போய் உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். தன்னுடைய தந்தை 4 வருடங்களாக single parent ஆக இருக்கிறார் என்றும் கூறினார். மேலும் தன் அம்மா கண்டிப்பாக பிழைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் தங்கள் குடும்பம் இருப்பதாக அவர் உருக்கமாக கூறியுள்ளார்.