அதிமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக கட்சிக்காக 20 வருடங்களாக முதல்வர்  ஸ்டாலின் உழைத்தார் என்பது உண்மைதான். ஆனால் உதயநிதி ஸ்டாலின் என்ன உழைப்பை கொடுத்தார் என்று அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளனர். திமுக கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதையே கிடையாது.

கருணாநிதியின் குடும்பம் என்ற ஒரே ஒரு அடையாளத்தால் மட்டும் தான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக மாறியுள்ளார். உதயநிதி கட்சிக்காக என்ன செய்தார். மற்றவர்கள் யாரும் கட்சிக்காக உழைக்கவில்லையா. திமுக கட்சி குடும்ப கட்சியாக மாறிவிட்ட து. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடு தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வரும். மேலும் மக்களுக்காக உழைத்த கட்சி அதிமுக என்றும் அதனால் விஜயால் ஒருபோதும் விமர்சிக்க முடியாது என்றும் கூறினார்.