கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆடராவிளை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீதர் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று மாலை ஸ்ரீதர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது சாலை ஓரமாக லோடுடன் லாரி நின்று கொண்டிருந்தது. அதே சமயம் விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீதரின் செருப்பு எதிர்பாராதவிதமாக லாரியின் மீது விழுந்தது. அதனை எடுப்பதற்காக ஸ்ரீதர் லாரி மீது ஏறினார்.

அப்போது மின் கம்பி உரசி ஸ்ரீதர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஸ்ரீதரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீதரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.