தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் வசிக்கும் வாலிபர் ஒருவர் நாய் வாலில் பட்டாசை கட்டி அதனை கொளுத்தி விடுகிறார். பட்டாசு வெடிக்கும் போது அந்த நாய் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறது. இதனால் நாய்க்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நாயை துன்புறுத்திய அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.