தளபதி விஜய் அவர்கள் என்றாலே முன்பெல்லாம்  வெளியாகும் அவரது படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்து அவருடைய மாஸ் என்ன என்பதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளாக வெளியிட்டு வருவர். இப்போது அவர் அரசியலுக்கு வந்து விட்டார் அவரது கடைசி படம் முடிந்த பின்பு எந்த கலெக்ஷன் வைத்து மாஸ் காட்டுவீர்கள் என்பது உள்ளிட்ட கேள்விகள் சமூக வலைத்தளத்தில் எழுந்தன.

அதற்கு பதிலாக இனி அடிக்கடி எங்களது தளபதியை மக்கள் மத்தியில் பார்க்கலாம் அவரது உரைகளை அடிக்கடி கேட்கலாம் என கூறி வந்தாலும் கலெக்ஷன் குறித்து மற்றொரு அறிவிப்பு ஒன்றை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில்

தமிழக முழுவதும் இருந்து மாநாட்டை மக்கள் காண வந்துள்ளனர். அதற்காக பேருந்து கட்டணம் மட்டும் எவ்வளவு வசூலிக்கப்பட்டிருப்பது என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி திருச்சி 25 லட்சம் கேரளா 75 லட்சம் சென்னை 51 கோவை 27 மதுரை 19 கன்னியாகுமரி 21 என கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேல் பேருந்து கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆனால் இது குறித்த உண்மை தன்மை என்ன என்பது குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

View this post on Instagram

 

A post shared by B A R A N I 🏄🏻 (@baranihere)