
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் விஜய் அவர்கள் திமுகவை நேரடியாக சாடி பேசியுள்ளார் என்பதை குறிப்பிட்டு தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பலரும் திமுகவை சாடியபடி பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பதிலுக்கு திமுக தரப்பிலும் கருத்துக்கள் பதிவிடப்பட கருத்து மோதல் நிலவ தொடங்கிவிட்டது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தமிழர்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இருப்பதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஜனவரி மாதத்தில் திமுக யூத் விங் மாநாடு நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் முகம் சுளிக்க தக்க உடை அணிந்து ஆடும் புகைப்படக் காட்சி ஒன்றையும், தமிழக வெற்றி கழக மாநாட்டில் தமிழர்களின் கலாச்சார ஒன்றான பறையாட்டம் நிகழ்த்தப்பட்டதையும் ஒப்பிட்டு இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் குறிப்பிட்டது இணையத்தில் சர்ச்சையை ஏற்ப்படுதியுள்ளது.
இது தான் வித்தியாசம் 😎😎 pic.twitter.com/lYRBTUs2Y9
— Tamizhaga Vetri Kazhagam News (@TVKNewsUpdates) October 27, 2024