விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி விசாலையில் நடைபெற்றது காலை முதலே மாநாடு திடலுக்கு தொண்டர்கள் வர ஆரம்பித்தனர். இந்த நிலையில் வெப்பம் தாங்காமல் மாநாட்டில் 90க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே சாலை விபத்தில் திருச்சியை சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.