
ஹரியானா மாநிலத்தில் 19 வயது இளம்பெண் மாயமானதாக அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சஞ்சு, பங்கஜ் இருவரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் இளம்பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். சஞ்சுவும் அந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இளம்பெண் கர்ப்பமானார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சஞ்சுவை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் சஞ்சு தனக்கு கால அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் காதலர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமான சஞ்சு நீண்ட டிரைவ் போகலாம் என கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்றார். அவர்களுடன் பங்கஜ், ரித்திக் ஆகியோரும் காரில் இருந்தனர். ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு மூன்று பேரும் அந்த பெண்ணை கொலை செய்து புதைத்து விட்டனர். இந்த வழக்கில் தலைமறைவான ரித்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.