நடிகை ஸ்ருதிகா ஹிந்தி பிக் பாஸில் என்ட்றி கொடுத்துள்ளார். இது நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே இருக்கும் நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ ரசிகர்கள் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது  தமிழில் பிக் பாஸ் சீசன் 8 ரசிகர்களிடம் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்ற நிலையில் அதற்கு விதிவிலக்காக வார இறுதியில் விஜய் சேதுபதி பேசுவது மட்டுமே தற்போது அவர்களுக்கு ஆறுதல் அளித்து வருகின்றது. இது ஒரு புறம் இருக்க தென்னிந்தியாவிலிருந்து முதன்முறையாக நடிகை ஸ்ருதிகா ஹிந்தி பிக் பாஸில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் அவர் பேசும் குழந்தைத்தனமான பேச்சு பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஹிந்தி பிக் பாஸில் நுழைந்த முதல் நாள் வட இந்திய ரசிகர்களுக்கு பெரிய அளவில் அவர் மீது எதிர்பார்ப்பு உருவாகவில்லை, இருந்தும் தொடர்ச்சியாக ஸ்ருதிஹாவை பார்த்து வந்த ரசிகர்கள் அவருக்கு லைக்சை குவிக்க தொடங்கினர்.

இதில் வார இறுதியில் எபிசோடுகளில் சல்மான் கான்  ஸ்ருதிகாவை கலாய்த்து வருவது வழக்கமாக இருக்கின்றது. இதனை அடுத்து ஸ்ருதிஹாவின் கணவர் பாங்காங் சென்றுவிட்டார். ஆகவே ஸ்ருதிஹா பிக் பாஸுடன் பேசும்போது தன்னுடைய கணவருக்கு தமிழில் மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோலவே பிக் பாஸ் ப்ரோமோவும் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் தமிழில் இந்தி பிக் பாஸ் பேசுவது இதுதான் முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.