
விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27ஆம் தேதி விக்ரவாண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது விஜய் தனது 69 ஆவது படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றொருபுறம் புஸ்சி ஆனந்த் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். மாநாடு பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் கூட விஜய் கலந்து கொள்ளவில்லை. தளபதி 69 படத்தின் பூஜையில் கலந்து கொண்டார் என விமர்சனங்கள் வந்தது.
இந்த நிலையில் செய்யாறு பாலு இது பற்றி கூறியதாவது, தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சுமார் 5 லட்சம் பேர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 80 மீட்டருக்கு ரேம்ப் வாக் செய்ய மாநாடு மேடையில் இருந்து மாநாடு முடியும் இடம் வரை தனியாக நீள்மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. நேரு ஸ்டேடியத்தில் விஜய் எப்படி ரசிகர்கள் இருக்கும் இடம் வரை சென்று அவர்களை சந்தித்து பேசினாரோ அதேபோல மாநாட்டில் தொண்டர்களை அவர் அருகிலேயே சென்று சந்தித்து பேச போகிறாராம். அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளிக்கு மிகவும் நெருக்கமான நாள்.
அப்போது மக்கள் துணிகளை எடுக்க கடைக்கு செல்வார்களா அல்லது மாநாட்டுக்கு வருவார்களா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கிறது. இன்னொரு பக்கம் மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் வருமா என்ற கேள்வியும் உள்ளது. இந்த அனைத்திற்கும் தயார் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடக்கும் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் காங்கிரஸ், பாஜக தலைவர்கள், ராகுல் காந்தி, பவன் கல்யாண், புதுச்சேரி முதல்வர், பிரகாஷ்ராஜ், விஷால் என காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் உலா வருகிறது. விஜய் அரசியல் கொள்கை என்ன? அவர் மாநாட்டில் எப்படி பேச போகிறார் என ஏகப்பட்ட கேள்விகளும் எழுந்துள்ளது.
காசுக்காக தான் விஜய் கட்சி ஆரம்பித்தாரா? என்ற விமர்சனம் எழுகிறது. சினிமாவில் படங்களில் நடிக்கும் போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்கள் ஆரம்பித்து சொந்த காசை போட்டு படம் எடுக்க மாட்டார்கள் என்றும், ஒவ்வொரு படத்துக்கும் கோலிவுட்ல ஹாலிவுட் நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு இணையாக சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போகும் விஜய் காசுக்காக தான் கட்சி ஆரம்பிக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் விஜய் காசுக்காக தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பிக்கவில்லை. உறுதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் என் அரசியலில் இறங்கி இருக்கிறார். தனது 69 ஆவது படத்தை சீக்கிரம் முடித்துவிட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபடுவார். 2026 தேர்தலை விஜய் சந்திப்பார் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.