
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டாணாக புயலாக மாறும். இந்த புயல் ஒடிசா மற்றும் மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.