பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அங்கு கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது கள்ளச்சாராயம் குடித்ததில் நேற்று 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி கள்ளச்சாராயம் குடித்ததில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 79 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 21 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதில் 30 பேர் வரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். மேலும் இந்த தகவலை சிவான் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.