விஜய் தனது கட்சியை கொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அவர் மக்கள் மனதை கவர்ந்து வருகின்றார்.

இந்நிலையில், அடுத்ததாக, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாபெரும் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கட்சி நிர்வாகிகளால் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாக மழைக்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்படும் என்பதால், தொண்டர்கள் அதற்கான தயாரிப்புகளை முன்னதாகவே செய்து வருகின்றனர்.

விக்கிரவாண்டியை அடுத்த ஏழாய் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தார். அவர் மழை விழுந்து மாநாடு பாதிக்காமல், முழுமையாக நடைபெறவேண்டும் என பிரார்த்தனை செய்தார்.