தெலங்கானா மாநிலத்தில் 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜு மற்றும் ஜமுனா தம்பதியரின் மகளான உக்குலுவுக்கு கண் வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமிக்கு பிறந்தது முதலே இதயம் தொடர்பான பிரச்னை இருந்திருக்கலாம் எனவும், அதனை முறையாக அடையாளம் காணவில்லை என்பதும் மருத்துவர்களின் கூறியுள்ளனர். இச்சம்பவம் பெற்றோரையும், குடும்பத்தினரையும்  பெரும் சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது.