மறைந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு இன்று (அக்.10) பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். முரசொலி செல்வம், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகனாகவும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவுக்கு முக்கியமான ஆளுமையாகவும் விளங்கினார். அவர் மரணத்தை தொடர்ந்து, அவரது உடல் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நிகழ்வில், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், முரசொலி செல்வத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதேபோல், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

முரசொலி செல்வம், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான “முரசொலி”யின் நிர்வாக ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்.