யூடியூப் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலமாகவும் மக்கள் சம்பாதித்து வருகின்றனர். அதிலும் யூடியூப்பில் வீடியோஸ் போட்டு வருமானம் ஈட்டிய நிறைய பேரை நாம் பார்க்கலாம். அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள், சமையல் குறிப்புகள், தொழில்கள், உடற்பயிற்சி ஆகியவை பற்றி வீடியோ பதிவிட்டு சம்பாதிக்கின்றனர்.

இந்த நிலையில் இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் சொந்தமாக யூடியூப் சேனல் உருவாக்க தமிழக அரசு சார்பில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. சென்னையில் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு http://www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.