
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த், ரத்த நாளத்தில் வீக்கம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் “ஸ்டென்ட்” வைத்த நிலையில் சில நாட்களாக மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில் உடல்நலம் முன்னேற்றத்தால் வீடு திரும்பினார். அவர் வீட்டுக்கு சென்ற நிலையில் நான் குணமாக வேண்டிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் சில வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
இந்தத் தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.