
திருப்பதி கோவிலில் லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இதற்கு ஆளும் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது திருப்பதி லட்டுவில் நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏழுமலையானிடன் மன்னிப்பு கேட்பதற்காக நடிகர் பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் இருக்கிறார். அதோடு திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி பேசிய ஒரு விஷயம் சர்ச்சையாக மாறிய நிலையில் நடிகர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்ததால் நடிகர் கார்த்தி அவரிடம் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் நடிகர் பவன் கல்யாண் கொடுத்த ஒரு பேட்டியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அண்டை மாநிலத்தைச் சேர்ந்த இளம் தலைவர் ஒருவர் வைரஸ் போன்ற சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்று கூறினார். சனாதன தர்மத்தை உங்களால் அழிக்க முடியாது. அதற்கு பதிலாக நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள் என்று கூறியுள்ளார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பவன் கல்யாண் மறைமுகமாக விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.