தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இதயத்தில் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருந்ததால் ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில் ஐசியூவில் வைத்து கண்காணிக்கப்பட்டார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் டிஸ்டார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை டிஸ்டார்ஜ் செய்யப்படுவார் என்று தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி அவருடைய ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.