சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 471 நாட்களுக்குப் பிறகு தற்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க ‌ அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தற்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் 471 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய நிலையில் உச்ச நீதிமன்றம் 4 நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வர தலா 25 லட்ச ரூபாய் என 2 நபர்கள் உத்திரவாதம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு வாரத்தில் இரண்டு முறை திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது.‌ மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.