சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படம் 600 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை அடைந்து சூப்பர் ஹிட் ஆனது. இது தொடர்ந்து துபாயில் சைமா 2023 விருது வழங்கும் விழா நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஜெயிலர் படத்திற்கு ஐந்து விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான விருதை நெல்சன் பெற்றுள்ளார்.சிறந்த காமெடி நடிகருக்கான விருதை யோகி பாபு பெற்றுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதை வசந்த் ரவி பெற்றுள்ளார்.சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதை விக்னேஷ் சிவன் “ரத்தமாரே” என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.