திருச்சியில் திருவெறும்பூர் அருகே உள்ள கார்ட்டூன் கைலாஷ் நகர் பகுதியில் வசித்து வருபவர்  ஆறுமுகம் (54). இவர் கடந்த 9ம் தேதி  அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அங்கு வந்த திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு என்ற வெங்கடேஷ், தமிழழகன் மற்றும் அவர்களது இன்னொரு நண்பன் ஆகியோர் ஆறுமுகத்திடம் பணத்தைக் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் இல்லாததால் ஆறுமுகத்திடமிருந்த செல்போனை பறித்துக் கொண்டனர்.

இதில் செய்வதறியாது பதற்றம் அடைந்த ஆறுமுகம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

புகாரின் படி திருவெறும்பூர் காவல்துறையினர் விஷ்ணு என்ற வெங்கடேஷ் மற்றும் தமிழழகன் ஆகியோரை கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். மேலும் திருவெறும்பூர் காவல்துறையினர் இன்னொருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.