
பிரான்சில் டொமினிகியூ (71), கிசெல் (72) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இன்னிலையில் டொமினிகியூ, தனது மனைவிக்கு போத மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைக்களை கொடுத்து மயக்கம் அடையச் செய்தார். அதன் பிறகு ஆன்லைனில் பலாத்காரம் செய்ய ஆட்களை எடுத்து, தனது மனைவியை பலாத்காரம் செய்ய வழிவகை செய்துள்ளார். இதனை இவர் சுமார் 10 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். இதுவரை இவரை 72 பேர் 92 முறை பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் 26 முதல் 74 வயதானவர்கள். இதைத்தொடர்ந்து டொமினிகியூ ஷாப்பிங் மாலுக்கு சென்ற போது, குட்டை பாவாடை அணிந்து வந்த பெண்ணுக்கு தெரியாமல் போனில் வீடியோ எடுத்த வழக்கில் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
அதன் பிறகு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கம்ப்யூட்டரை கைப்பற்றி பார்க்கும் போது மேல்கண்ட விவரங்கள் தெரியவந்தது. அந்த 74 பேர்களில் 50 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதன் பிறகு டொமினிகியூவை நீதிமன்றத்தில் ஆதார் படுத்தினர். அப்பொழுது அவரது மகளும், 2 மகன்களும் கிசெலுடன் வந்திருந்தனர். பலாத்காரம் செய்யும் போது தான் போதையில் இருப்பதைக் கூட அவர் உணரவில்லை, அந்த அளவிற்கு அதிகமான போதை மாத்திரைகளை கொடுத்துள்ளார். இதனால் அவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக என்ன நடந்தது என்பதே தெரியவில்லை, ஞாபக மறதியும் அதிகமாகிவிட்டது. இதற்கு சிகிச்சை அளித்தும் பயனில்லை என்று கூறினார். இந்த வழக்கு டிசம்பர் 20ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.