
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கூலி. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு உள்ளது.
இந்நிலையில், கூலி படத்தின் கதாபாத்திர அறிமுகம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.